முகப்பு

வணக்கம். 

அலை ஓசை சாண்டியேகோ தமிழ்ச்சங்க உறுப்பினர்களால் நடத்தப்படும் பதிவுத்தளம். இங்கு எங்கள் அலை ஓசை எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்தும், பார்த்தும் ரசிக்கலாம். மறக்காமல் உங்கள் பின்னூட்டங்களை இட்டுச்செல்லுங்கள். நீங்கள் உங்கள் படைப்புகளை அளிக்க alai_osai@sdts.org என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.

தங்கள் வருகைக்கு நன்றி.

அலை ஓசை குழு.

பதிதல்கள்

கணினியில் ஒலிக்கும் அலை ஓசை படித்தேன்.
அதை ஆர்ப்பரிக்க வைக்கும் ஆசிரியர் குழுவிற்கு வணக்கம்.

கார்த்திகேயினி கவிதையாயினியாக மாறி எழுதிய கவிதைகளும் , தீப்பொறியாயிருந்தாலும் சுடாது மனதை நெகிழ வைக்கும் முருகப்பனின் கவிதைகளும் மிகவும் அருமை.

ப்ரியா ராமின் சிறுகதை ஒரு நல்ல எழுத்தாளர் உருவாகி வருவதைக் காண்பிக்கிறது.( தேவையில்லாத சில ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம்)

ஆசிரியர் திரு.கோட்டாளத்தின் கட்டுரைகள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.

இன்னும் புதிய சமையல் குறிப்புகளோடும் , பல கட்டுரைகள், கவிதை கதைகளோடும் அலை ஓசை பொங்கி அடங்காது ஒலிக்க வாழ்த்துக்கள்.

வேணி வள்ளிநாயகம்.

மறுமொழி அளிக்கவும்

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்