priyapriya எழுதியவை | டிசம்பர் 13, 2007

காரட் பாயசம்

தேவையானவை:
 
காரட்:  7-8
 
சக்கரை:  100 கிராம்
 
பால்:  1/2 லிட்டர்
 
நெய்:  3 ஸ்பூன்
 
முந்திரி : சிறிது
 
கேசரி பவுடர்: 1/4 சிட்டிகை, குங்குமப்பூ: சிறிது,  ஏலைக்காய்:  2
 
செய்முறை:
 
காரட்டை தோல் சீவி , பெரிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் ( 2 விஸில்) அவித்துக் கொள்ளவும்.
 
பின் அவித்த காயை மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
 
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் (சிறு தணலில்) வைத்து, சிறிது நெய் விட்டு
அரைத்ததை ஊற்றி அடி பிடிக்காமல் கிளறவும்.
 
பச்சை வாசனை போன பின், சக்கரை சேர்க்கவும்.
 
சக்கரை நன்கு கரைந்து, கலவை சூடானதும் பாத்திரத்தை இறக்கி விடவும்.
 
பாலை நன்கு காய்ச்சி, ஆறியதும், காரட் கூழுடன் கலந்து விடவும்.
 
ஏலைக்காய், குங்குமப்பூ, கேசரி பவுடர் கலந்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
 
பரிமாறும் முன் சிறிது நெய் சூடாக்கி அதில் முந்திரியை சிவக்க வறுத்து  பாயசத்தில் கலக்கவும்.
 
குறிப்பு:
இனிப்பு சற்று அதிகம் தேவையானால், சக்கரையை குறைத்து அதற்கு பதில் ‘மில்க் மெய்ட்’ டின்னில் 1/2 டின் சேர்க்கலாம்.

- ப்ரியா ராம்


மறுவினைகள்

  1. மிகவும் ருசியாக இருந்தது


மறுமொழி அளிக்கவும்

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்

வகைகள்