பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்த தாய்
கட்டிலைக் காத்திருந்தாள், தன் பிள்ளை முகம் காண, பிறகு,
அவன் உண்ண உறங்கக் காத்து நின்றே கண்கள் பூத்தாள்.
அவன் சிரித்ததை பேசியதை மனதிலே காத்து நெஞ்சம் நெகிழ்ந்தாள்.
அவன் படிக்க பட்டம் பெற உதவும் ஊக்கத்தை அவனில் காத்து வெற்றியில் பூரித்தாள்.
அவன் மனை துணை என்று கூடியபின் தான் தனிமை காத்து அன்பைப் பெருக்கினாள்.
அவன் பிள்ளையிடம் வெளிப்பட்ட பேரன்பினைக் காத்து நிதம் பெருமிதம் அடைந்தாள். அதன்பின்
வயோதிகத்தில் அவனை மனதில் சுமந்த தாய் கட்டிலைக் காத்திருந்தாள் மீண்டும், தன் பிள்ளை முகம் காண!
கார்த்தி சம்பத்