உதவி

அலை ஓசையில் தமிழில் எழுத..

தமிழில் எழுத எண்ணற்ற முறைகளும், மென்பொருள்களும் உள்ளன. கீழ்க்காணும் தொடுப்பில் உள்ள மென்பொருள் ஏதேனும் ஒன்றை  நீங்கள் உபயோகப்படுத்தலாம். குறிப்பாக NHMWriter என்ற மென்பொருள் தரவிறக்கவும் பயன்படுத்தவும் எளிதாக இருப்பதாகக் கருதுகிறேன்.

 தமிழில் எழுத உதவும் மென்பொருள்கள்

மென்பொருள் எதுவும் உங்கள் கணிணியில் ஏற்றிக்கொள்ள தயக்கம் இருப்பின் இந்த தொடுப்பைப் பயன்படுத்தலாம்.

எழில் நிலா தமிழ் எழுத்துக்கருவி. 

அலை ஓசையில் நீங்களும் பங்கேற்க விரும்பினால்…

     உங்களிடம் WordPress.com – மின் பயனர் கணக்கு (user account) ஏற்கனவே இருந்தால், அந்த கணக்கில் உள்ள உங்களது மின்னஞ்சல் (email) முகவரியை எங்களிடம் தெரிவியுங்கள். உங்களிடம் WordPress.com-மின் பயனர் கணக்கு இல்லையென்றால், ஒரு புதிய கணக்கைத் தொடங்குவது மிக மிக எளிது. நீங்கள் இந்த http://wordpress.com/signup/ தொடுப்பை பயன்படுத்தி புதிய கணக்கைத் தொடங்கி, அதன்பின் அதில் நீங்கள் உபயோகித்த உங்களது மின்னஞ்சல் முகவரியை எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் இந்த மின்னஞ்சல் முகவரியை உபயோகித்து, அலை ஓசையின் பங்கேற்பாளராக உங்களை இணைத்துக் கொள்வோம். நீங்கள் பங்கேற்பாளராக இணைக்கப்பட்டதை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்போம்.

இதற்குப் பிறகு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கீழ்காணும் முறையில் இந்தத் தளத்தில் பதிவுகளை சேர்க்கலாம்.

அ) முதலில் http://wordpress.com வலைத்தளத்தில் புகுபதியுங்கள் (login). உள்ளே சென்றபின் அலை ஓசை வலைப்பக்கத்தின் தொடுப்பு(link) கீழே படத்தில் குறித்திருப்பது போன்று தோன்றும்.

loginhomepage (படத்தின் மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் பார்க்கவும்)

ஆ) அந்த தொடுப்பைச் சொடுக்கி (click) உள்ளே சென்று, “எழுதவும்” என்ற தத்தலைச் (tab) சொடுக்குங்கள்.

கட்டுப்பாட்டகம் (படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்)

இ) அதன் பின் நீங்கள் உங்கள் படைப்பை இடுகையாக (blog) பதிவு செய்ய வேண்டியதுதான். முதலில் உங்களின் இடுகைக்கு ஒரு தலைப்பு வேண்டுமல்லவா? கீழே குறிப்பிட்டிருப்பது போல் தலைப்பைப் பதிவு செய்யுங்கள்.

 எழுதவும் (படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்)

ஈ) பின்னர் உங்களது இடுகையை எந்த வகையில் சேர்ப்பது என்பதை வலதுபக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருத்தமான வகையை தெரிவு (select) செய்யுங்கள். பொருத்தமானதாக எதுவும் இல்லையென்றால், எதையும் தெரிவு செய்யாமல் விட்டுவிடுங்கள். நமது பதிப்பாளர்கள் பொருத்தமான ஒன்றை சேர்த்துவிடுவார்கள். பின்னர் கீழே படத்தில் குறிப்பிட்டிருப்பது போல், “நிரல்” என்ற தத்தலை (tab) சொடுக்கி உங்கள் இடுகையை பதிவு செய்யுங்கள். (இந்த பக்கத்தின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள எழில் நிலா எழுத்துருவைக் கொண்டு தமிழில் பதிவு செய்யுங்கள்)

 வகை, நிரல் (படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்)

எ) அவ்வளவுதான்! பதிவை முடித்தபின் “மதிப்பீட்டிற்கு சமர்ப்பிக்கவும்” என்ற பொத்தானைச்(button) சொடுக்கிவிடுங்கள்.

 சமர்ப்பிற்க (படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்)

ஏ) உங்கள் பதிவு நமது தளத்தில் எவ்வாறு தோன்றும் என்பதை “பதிவுகளை காண்” என்ற தொடுப்பைச் சொடுக்கி நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

காண்க (படத்தின் மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் பார்க்கவும்)

மேலும் உதவி தேவையென்றால்..

alai_osai@sdts.org என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

%d bloggers like this: