alaioosai எழுதியவை | செப்ரெம்பர் 15, 2012

கோட்டாளம் எழுதிய நூல்கள்

1. அறிவியல், மருத்துவம், பொருளாதாரம் போன்ற துறைகளைப் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் பல நூல்கள் இருப்பதை நாம் அறிவோம். அவ்வாறான நூல்கள் தமிழில் குறைவாகவே உள்ளன. ஆன்மீகம் தவிர மற்றத் துறைகளில் அறிவு பெற விரும்பும் ஒரு தமிழன் முதலில் ஆங்கிலம் கற்றுக்கொண்டு பிறகு அத்துறைக்கான நூல்களைப் படிக்க வேண்டிய நிலை தற்காலத்தில் நிலவுகிறது. இந்நிலையை மாற்றித் தமிழிலும் அறிவு நூல்களைக் கொண்டுவர வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கிணங்க ஜார்ஜ் கேமாவ் என்ற சிறந்த அறிவியலாளர் பொதுமக்களுக்காக ஆங்கிலத்தில் எழுதிய ‘One, Two, Three, Infinity’ என்ற நூலைத் தமிழில் ஆக்கியிருக்கிறேன். அதை நீங்கள் https://docs.google.com/open?id=0BzwpbxABzaV5SElZSVV1T1ptZUU என்ற தளத்தில் காணலாம். உங்கள் கணினியில் பதிவிறக்கி வைத்தும் படிக்கலாம். உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளலாம்.

2. அமெரிக்காவில் வாழும் தமிழ்ப் பெற்றோர் தம் குழந்தைகள் தமிழும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புவது இயல்பே. ஆனால், அக் குழத்தைகள் சிறுவயதில் தமிழ் கற்பதில் ஆர்வமாக இருப்பதில்லை. மேலும் தற்போதுள்ள கல்வி முறைகளில் சிறுவயதிலிருந்தே அதிக நேரமும் முயற்சியும் செலவிட வேண்டிய அவசியம் உள்ளது. சிறுவயதிலிருந்தே அம்முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பில்லாதவர்களுக்கும், அந்த வாய்ப்பைத் தவற விட்டவர்களுக்கும், மற்றும் தமிழ்க் குடும்பத்தில் பிறக்காமல் ஆர்வத்தினால் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பும் பெரியவர்களுக்கும் உதவியாக இருக்குமாறு நான் ஒரு நூல் எழுதியிருக்கிறேன். அந்நூலை நீங்கள் https://docs.google.com/open?id=0BzwpbxABzaV5MHotLVVKal9xYUE என்ற தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்வதுடன், அதனால் பயனடையக்கூடிய மற்றவர்களின் கவனத்துக்கும் அனுப்பலாம்.

3. அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு. அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழில் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் உள்ள ஒரு பெரும் இடர்ப்பாடு என்னவென்றால், அதற்குத் தேவையான கலைச்சொற்கள் இல்லாததாகும். கலைச்சொல் இல்லாத ஒரு கருத்துவுக்குப் பல எழுத்தாளர்களும் அவரவர் உடனடித் தேவைக்குத் தக்கவாறு பலவிதமாகக் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அவ்வாறு உருவாகும் கலைச்சொற்களை ஒரே சீரான நடையைப் பின்பற்றி அமைவதில்லை. அவற்றுள் சில செந்தமிழ்ச் சொற்களாகவும், சில கலப்புமொழிச் சொற்களாகவும், வேறு சில ஆங்கிலச் சொற்களாகவும் அமைகின்றன. எல்லா எழுத்தாளர்களும் ஒரேசீராக எழுத வேண்டுமானாலும், ஒன்றுடனொன்று இயைபுடைய அறிவியல் நூல்கள் தமிழில் தோன்ற வேண்டுமானாலும், அனைத்துக் கலைச்சொற்களும் அடங்கிய ஒரு பட்டியலை உருவாக்கி அனைவரும் அந்தப் பட்டியலையே பயன்படுத்துவதான ஒரு மரபைத் தமிழ் எழுத்தாளர்கள் ஏற்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் ஆங்கிலத்தில் வழங்கும் கலைச்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் இணையாக ஒரு துல்லியமான, திட்டவட்டமான, ஒருத்துவத் தமிழ்க் கலைச்சொல்லைத் தரும் முழுமையான, ஒன்றுக்கொன்றான, தன்னியைபான பட்டியலை முன்வைப்பதன் முதற்படி இந்நூல்.

4. பால்வீதியின் பயணிகளுக்கான ஒரு வழிகாட்டி, டக்ளஸ் ஆடம்ஸ்; ஒரு சிரிப்பான அறிவியல் புனைவு. ஒரு வியாழக்கிழமை காலை வழக்கம்போல் விழித்தெழுந்த ஆரதன் அண்டத்தில் நிகழ்ந்த பல சாத்தியக்கூறின்மை நிகழ்ச்சிகளால் வெவ்வேறு உலகங்களுக்குச் சென்று பலவித உயிரினங்களைச் சந்தித்துச் சில இக்கட்டான நிலைமைகளின் சிக்கிப் பிறகு தப்பித்து இறுதியில் வேற்றுலக நண்பர்களுடன் வாழ்கிறான். ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: ஜெயபாண்டியன் கோட்டாளம்.

5. தமிழ் எழுத்துக்களின் சரியான உச்சரிப்பு. தற்காலத்தில் பெரும்பான்மையான தமிழர்கள் தவறாக உச்சரிக்கும் சில எழுத்துக்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாம் தமிழ் எழுதும்போது சில சொற்களில் வருவது இந்த ந வா,, அந்த ன வா, இந்த ர வா, அந்த ற வா என்றெல்லாம் ஐயங்கள் எழுகின்றன. இந்த ஐயங்களெல்லாம் நாம் அந்த எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்காததாலே ஏற்படுகின்றன. தமிழில் ஒரே ஒலிக்கு இரண்டு எழுத்துக்கள் கிடையாது. ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு தனித்துவமான ஒலி உண்டு. இதைத் தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் தெளிவாகச் சொல்கின்றன.

– கோட்டாளம்


மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: